
பழனி ஆர்.எஃப் சாலையில் மலையப்பசாமி வைத்தியசாலை அருகே உள்ள அரசு மதுக்கடையின் பின்புறம் பார் செயல்படுகிறது. அங்குள்ள பாரில் அதிகாலையிலேயே கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்து வருகின்றனர். தமிழ்நாட்டில் திண்டுக்கல் மாவட்டத்தில் தான் அதிக வாகன விபத்துகள் நடந்து வருகின்றன. சில நேரங்களில் குடிபோதையில் கொலை சம்பவங்களும் அரங்கேற்றம் ஆகின்றது. அப்படி இருந்தும் அதிகாலையில் கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்யப்படுவது தொடர்ந்து கொண்டே உள்ளன.
இந்த விசயத்தில் மதுவிலக்கு போலீசார் நடவடிக்கை எடுப்பதில் ஆர்வம் காட்டுவது இல்லை. மாதம் ஒருமுறை கமிஷன் வந்தால் போதுமென்ற எண்ணத்தில் உள்ளதாகவும், கள்ளச்சந்தையில் நடந்துவரும் மது விற்பனையை தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வேறுசிலரை கண்காணிப்பு பணியில் ஈடுபட உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.