
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான ராகுல் டிராவிட், கடந்த 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பையில் இந்திய அணிக்கு பயிற்சியாளராக செயல்பட்டு கோப்பையை வெல்ல உதவினார். இந்த நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பயிற்சி செய்யும் மைதானத்திற்கு ஊன்றுகோளுடன் வந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளார் ராகுல் டிராவிட். வீரர்கள் பயிற்சி செய்யும் இடத்திற்கு வந்த அவர் ரியான் பராக், ஜெய்ஸ் வால் ஆகிய இளம் வீரர்களுடன் கலந்துரையாடினார்.

தனது சொந்த ஊரான பெங்களூரில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தபோது காயம் ஏற்பட்டதாக ராஜஸ்தான் ராயல் அணி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. கடந்த வாரம் கர்நாடகாவில் நடந்த உள்ளூர் தொடரில், தனது மகனுடன் பங்கேற்ற போது, ராகுல் டிராவிட்டுக்கு இடது காலில் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இருந்தாலும் அந்தப் போட்டியில் பேட்டிங் செய்த அவர் 66 பந்துகளில் 43 ரன்களை எடுத்தார். அவர் விளையாடிய அணி தோல்வியை தழுவியது. தனது காலில் காயம் ஏற்பட்டிருந்த போதும் ஊன்றுகோளுடன் வந்து அணி வீரர்களுடன் கலந்துரையாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
ஐபிஎல் தொடர் வரும் 22 ஆம் தேதி தொடங்கி, மே மாதம் 25 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் ராகுல் டிவிட், குமார் சங்ககாரா ஆகியோர் சஞ்சு சம்சனுடன் இணைந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வழிநடத்த உள்ளனர்.