
தமிழ் திரையுலகில் பிரபல நடிகை சோனா தென்னிந்திய திரைப்பட தொழிலாளிகள் சம்மேளனத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை சோனா தனது வாழ்க்கை சம்பவங்களை தழுவி ஸ்மோக் எனும் பெயரில் வெப்சீரிஸ் ஒன்றை தயாரித்து, இயக்கியுள்ளார். அந்த வெப்சீரிஸ் விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் அதில் சர்ச்சை எழுந்துள்ளது. இது சம்பந்தமாக நடிகை சோனா கூறுகையில், தான் தயாரித்து இயக்கியுள்ள வெப்சீரிஸுக்கு பெரிய அளவில் பிரச்சினை ஏற்படுத்தி வருவதாகவும் அதுதொடர்பான காப்பி அடங்கிய ஹார்ட் டிஸ்க்கை தர மறுப்பதாதவும் தயாரிப்பு நிர்வாகி சங்கர் என்பவர் மீது குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் இது சம்பந்தமாக தயாரிப்பு நிர்வாகிகள் சங்கத்தின் தலைவர் பாலகோபியிடம் நடிகை சோனா முறையிட்ட போது, நடிகை சோனாவிடம் மூன்று மடங்கு அதிகமாக பணம் கேட்டதாகவும், நீ எங்கு சென்றாலும் என்னை யாரும் ஒன்றும் செய்யமுடியாது. நீ என்ன வேணாலும் பண்ணிக்கோ என மிரட்டியுள்ளார். சரி இதற்கு மேலும் பொறுக்க முடியாமல் தான் தொழிலாளிகள் சம்மேளனத்தில் நிர்வாகிகளை சந்தித்து முறையிடுவதற்காக வந்துள்ளார். ஆனால் நிர்வாகிகள் யாரும் இல்லாத நிலையில், அங்குள்ள பெண் ஊழியர் நடிகை சோனாவை இங்கெல்லாம் அமரக்கூடாது என விரட்ட முயன்றுள்ளார்.
ஆன் ஆதிக்கம் நிறைந்த திரையுலகில், ஒரு பெண் தனது தன்னம்பிக்கையின் காரணமாக ஒரு வெப்சீரீஸை தாயாரித்து, இயக்கியுள்ளார். அவரது நியாயமான கோரிக்கைகளை கேட்டு தீர்வுகாண வேண்டிய பெப்சி நிர்வாகிகள், நான்கு மணி நேரம் தர்ணாவில் இருந்தபோது யாருமே அலுவலகத்திற்கு வருகை தராதது வெட்கக்கேடானது என திரையுலகினர் கூறுகின்றனர்.