
தமிழகத்தின் எல்லையோர மாவட்டங்கள் வழியாக, அண்டை மாநிலங்களுக்கு காவல்துறையினர் கண்ணில் படாமல், எரி சாராயம் கடத்துவதை சில கும்பல், தொழிலாக செய்து வருகின்றனர். இந்நிலையில் கோயம்புத்தூர் மண்டலம் சிஐயூ (CIU) போலீசாருக்கு கர்நாடக மாநிலத்திலிருந்து, எரிசாராயம் கடத்தி வரப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது.

தகவலையடுத்து ஆய்வாளர் காமராஜ், உதவி ஆய்வாளர் உதயசந்திரன் தலைமையிலும் தலைமை காவலர் மதிவாணன் மற்றும் CIU காவலர்களால் அதிரடியாக நடத்தப்பட்ட வாகன சோதனையில், கிருஷ்ணகிரி மாவட்டம் தர்கா பகுதியில், ஒசூர் பெங்களூரு TO சேலம் சாலையில் ஹூப்ளியில் இருந்து கேரளாவிற்கு, ஈச்சர் லாரியில் காய்கறி மூட்டைக்குள் 215 கேனில் கடத்தி செல்லப்பட்ட 7,525 லிட்டர் எரி சாராயத்தை
பறிமுதல் செய்துள்ளனர்.
பின்னர் கடத்தலுக்கு பயன்படுத்திய லாரி மற்றும் ஒட்டுநர் உட்பட இருவரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.