எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட காவலர்

மதுரை விமான நிலையம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஈச்சனேறி பகுதியில் பாதி எரிந்த நிலையில், அடையாளம் தெரியாத இளைஞரின் சடலம் கிடந்துள்ளது. சடலத்தை கைப்பற்றி பெருங்குடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர்.

இந்த நிலையில், கைப்பற்றப்பட்ட அந்த சடலம் விருதுநகர் மாவட்டம் அழகாபுரி முக்குலத்தைச் சேர்ந்த மலையரசன் என்பதும், இவர் சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் பணிபுரிந்த தனிப்படை காவலர் என்பதும் தெரியவந்துள்ளது.

முன்னதாக இவரது மனைவி பாண்டி செல்வி கடந்த 1 ஆம் தேதி மானாமதுரை பகுதியில், வாகன விபத்தில் காயம் ஏற்பட்ட நிலையில், மதுரை சிந்தாமணி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி கடந்த ஐந்து நாட்களுக்கு முன் உயிரிழந்துள்ளார். இதையடுத்து காவலர் மலையரசன் மனைவி மரணம் குறித்து சிந்தாமணி பகுதியில் உள்ள மருத்துவமனையில் ரசீது உள்ளிட்ட ஆவணங்களை வாங்குவதற்காக வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அந்த மருத்துவமனையில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஈச்சனேறி பகுதியில், பாதி எரிந்த நிலையில் மலையரசன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இதைத்தொடர்ந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள மலையரசனின் உடலை, உறவினர்கள் பார்த்து உறுதி செய்ததை தொடர்ந்து, போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குற்றவாளியை கைது செய்யும் முறை சடலத்தை வாங்க மாட்டோம் என உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Related Posts

பாலை ரோட்டில் கொட்டி, அரசுக்கு எதிராக முழக்கமிட்ட பால் உற்பத்தியாளர்கள் !

தமிழ்நாடு அரசு பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பால் உற்பத்தியாளர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர் பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும். மதுரை ஆவின் நிர்வாகம் லாபத்தில் 50 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும். 50…

Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

“பிரசாந்த் 55” படத்தின் அறிவிப்பு வெளியீடு !

“பிரசாந்த் 55” படத்தின் அறிவிப்பு வெளியீடு !

“காலிங்கராயன்” படத்தின் திரைவிமர்சனம்

“காலிங்கராயன்” படத்தின் திரைவிமர்சனம்

“தரைப்படை” படத்தின் திரைவிமர்சனம்

“தரைப்படை” படத்தின் திரைவிமர்சனம்

கூலி வேலை செய்யும் விசைத்தறியாளர்களின் கோரிக்கைகளை  நிறைவேற்ற வேண்டும். அண்ணாமலை வலியுறுத்தல் ! 

கூலி வேலை செய்யும் விசைத்தறியாளர்களின் கோரிக்கைகளை  நிறைவேற்ற வேண்டும். அண்ணாமலை வலியுறுத்தல் ! 

“சர்தார்-2” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசர் வெளியீடு !

“சர்தார்-2” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசர் வெளியீடு !

சீயான் விக்ரமின் “வீர தீர சூரன்” படத்தின் திரைவிமர்சனம்

சீயான் விக்ரமின் “வீர தீர சூரன்” படத்தின் திரைவிமர்சனம்