
தமிழகத்தில் இந்தி படித்தவர்கள் வட மாநிலங்களுக்கு சென்று பானிபூரி தான் தின்ன வேண்டும் என்று அமைச்சர் தாமு அன்பரசன் பேசியுள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம், நந்திவரம், கூடுவாஞ்சேரியில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில், தா.மோ. அன்பரசன் பேசுகையில், இந்தி படித்தவர் என் வீட்டில் மாடு மேய்த்து வருகிறார் என்று கூறினார்.

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை, தமிழகத்தில் வேலைக்கான ஆட்கள் பற்றாக்குறையை போக்கும் புலம்பெயர் தொழிலாளர்களை இழிவுபடுத்துவதை திமுகவினர் கைவிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.